கேளிக்கை விளையாட்டு பூங்காவில் தீ: 9 சிறுவர்கள் உட்பட 25க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

புதுடெல்லி:

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கேளிக்கைப் பூங்காவில் மே 25ஆம் தேதி, தீ பரவியதில் 27 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் ஒன்பது பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்கோட்டில் உள்ள ‘DRP’ கேளிக்கை விளையாட்டுப் பூங்காவில் தீ ஏற்பட்டபோது 300க்கும் மேற்பட்டோர் அங்கிருந்ததாகத் தெரிகிறது.

நுழைவாயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கட்டடம் சரிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளதாக ராஜ்கோட் நகரத் தீயணைப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

மின்கோளாற்றால் தீ மூண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

உயிரிழந்தோரின் சடலங்கள் மோசமாகக் கருகிய நிலையிலிருப்பதால் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here