சீனாவில் திவெட் கல்வி: 200 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு -பெய்ஜிங்கில் ஸாஹிட் அறிவிப்பு

பி.ஆர்.ராஜன்

சீனாவில் திவெட் எனப்படும் தொழில்நுட்பம், தொழில் கல்வி, பயிற்சி கல்வியை மேற்கொள்வதற்கு 200 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று அறிவித்தார்.

மலேசியா – சீனா அனைத்துலக தொழில் துறை – திவெட் கல்வி ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெய்ஜிங் சென்றிருக்கும் அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்திய சமுதாயப் பிள்ளைகள் குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தொழில்நுட்பம், தொழில் கல்வி, தொழில் பயிற்சி ஆகியவற்றில் உயர் திறன் பெறுவதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் உயர் சம்பளம் பெற்று வாழ்க்கையில் சிறக்க முடியும் என்று ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.

நாடு திரும்பியதும் இதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் தரப்படும் என்று அவர் தெரிவித்ததாக அவரின் இந்தியர் நலத்துறை சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

சீனாவுக்கான இந்த வருகையின் போது சீனப் பிரதமர் லி கியாங்கை டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி சந்தித்துப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here