கோலாலம்பூர்:
மலேசியாவில் தனது முதல் தரவு மையத்தை அமைக்கும் நோக்கில் சுமார் US$2 பில்லியன் டாலர்களை (RM9.43பில்லியன்) முதலீடு செய்யாவுள்ளதாக Google உறுதியளித்துள்ளது.
கூகுளின் முதலீடு தொடர்பான இந்த அறிவிப்பிற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்பு தெரிவிட்டுள்ளார்.
கூகுளின் இந்த முதலீட்டு திட்டமானது மலேசியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும், 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் 26,500 வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
கூகுளின் இந்த முதலீடு மூலம் கூடுதலான அந்நிய முதலீட்டாளர்கள் மலேசியாவில் தங்களின் வர்த்தக, பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்று அவர் கூறினார்.
இலக்கவியல் தரவு மற்றும் GOOGLE CLOUD மூலமாக மலேசியாவில் கூகுள் நிறுவனம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு முதலீடு செய்யவுள்ளதாக BLOOMBERG வர்த்தக இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















