முகநூல் வழி 7 மோட்டார் சைக்கிள் வாங்க நினைத்த தொழிலதிபர் 179,376 ரிங்கிட்டை இழந்த சோகம்

 சமீபத்தில் முகநூலில் சிறப்பு வாகன பதிவு எண்கள் கொண்ட ஏழு யூனிட் மோட்டார் சைக்கிள்களை வாங்க நினைத்த தொழிலதிபர்  179,376 ரிங்கிட்டை இழந்துள்ளார். சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஹட்டா சே டின் கூறுகையில், 49 வயதான அந்த நபர், அந்த நோக்கத்திற்காக வாட்ஸ்அப் அப்ளிகேஷன் மூலம் தெரியாத நபருடன் பழகுவதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட நபர் மே 24 முதல் 28 வரை, ஏழு யூனிட் ஹோண்டா மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்காக, மொத்தம் 179,376 ரிங்கிட்டை ஏழு பரிவர்த்தனைகளில் மாற்றியிருக்கிறார்.

வாக்குறுதியளிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துகொண்டார். நேற்று காவல்துறையில் புகார் அளித்த பின் குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்களை விற்க முன்வருபவர்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், மோசடிக்கு ஆளாகாமல் இருக்க உடனடியாக சரிபார்க்குமாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here