இந்திய ரசிகர்கள் காசு கேட்பார்கள் ஆஸி. கேப்டன்!

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பாட் கம்மின்ஸுக்கு அதிக ரசிகர்கள் தற்போது உருவாகி வருகின்றனர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்ற பாட் கம்மின்ஸ் தனது அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார்.

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு ஏலத்தில் கம்மின்ஸ், 20 கோடியே 75 லட்சம் ரூபாய் தொகைக்கு சென்றார். இந்த நிலையில் பாட் கம்மின்ஸ் எப்போதுமே உதவி செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் தமக்கு கிடைத்த பணத்தில் பாதியை கொரோனா நிதி உதவிக்கு வழங்குவதாக கம்மின்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்த நிலையில் இந்திய ரசிகர்களால் தாம் தொந்தரவு செய்யப்படுவதாக பாட் கம்மின்ஸ் கூறியிருக்கிறார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கம்மின்ஸ், இந்திய ரசிகர்கள் சிலர் என்னுடைய வீட்டின் முகவரியை கண்டுபிடித்து விட்டார்கள். அதில் சிலர் எனக்கு பணம் வேண்டும் என்னுடைய ஹாஸ்பிடல் பில் இது என்று எனக்கு உதவி செய்யுங்கள் என கடிதம் அனுப்ப தொடங்கினார்கள்.
இதுபோல் எனக்கு பலமுறை சம்பவங்கள் நடைபெற்று விட்டது. அதே சமயம் விராட் கோலி ரசிகர்கள் ஒரு படி மேல் இருப்பார்கள். ஒரு முறை நான் விராட் கோலி குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்தேன். அதில் நான் விராட் கோலியை பாராட்டதான் செய்தேன். விராட் கோலி ஒரு சிறந்த வீரர், அவர் எங்களுக்கு எதிராக சதம் அடிக்க கூடாது என நினைக்கிறேன் என தெரிவித்தேன்.
அதன் பிறகு ஆறு மாதம் கழித்து விராட் கோலி சதம் அடித்தவுடன், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் என்னை டேக் செய்து திட்ட தொடங்கி விட்டார்கள். திடீரென்று என்னுடைய மொபைலுக்கு பல குறுஞ்செய்திகளும் நோட்டிபிகேஷன் வந்தது. அப்போதுதான் தெரிந்தது விராட் கோலி ரசிகர்கள் என்னை நான் சொன்ன கருத்துக்காக திட்டுகிறார்கள். இப்படி பல விஷயங்கள் எனக்கு இந்திய ரசிகர்களிடமிருந்து அனுபவம் கிடைத்திருக்கிறது என பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here