ஆர்சனல் 5 புள்ளிகள் முன்னிலை

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (ஸ்பர்ஸ்) குழுவை 4-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வீழ்த்தியது.

இதன் மூலம் லீக் பட்டியலில் ஆர்சனல் மீண்டும் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ச்சியான சமநிலைகளைப் பதிவு செய்ததால் ஆர்சனலுக்குச் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் அது சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆர்சனலுக்காக எபெரெச்சி இசே மற்றும் விக்டர் கியோகெரெஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களை போட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here