கோலாலம்பூர்:
இன்று (ஜூன் 3) அதிகாரப்பூர்வ பிறந்தநாளை கொண்டாடும் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த இனிய பிறந்த நாளில் பேரரசர், பேரரசியார் மற்றும் முழு அரச குடும்பமும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் இருக்க இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பாக பிரார்த்தனை செய்வதாக அவர் சொன்னார்.
“நாட்டின் அரச தலைவராகவும், இஸ்லாத்தின் பாதுகாவலராகவும், இந்த நாட்டில் உள்ள அனைத்து இனங்களின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வின் அடையாளமாகவும், நியாயமாகவும், சமமாகவும் ஆட்சி செய்வதில் மாட்சிமை தங்கிய பேரரசேயன் மாண்பு என்றென்றும் நிலைத்திருக்கட்டும்” என்று அவர் திங்கள்கிழமை தனது முகநூலில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில் தெரிவித்துள்ளார்.