இந்தியத் தொழில்முனைவோர் கடனுதவுத் திட்டத்திற்கு RM50 மில்லியன் ஒதுக்கீடு- டத்தோ ரமணன் அறிவிப்பு

பேங்க் ராக்யாட் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு அறிமுகம் செய்தபோது தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத்துறை துணையாஇச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், பேங்க் ராக்யாட்டின் தலைவர் டத்தோ முகமட் இர்வான் முகமட் முபாரக் ஆகியோருடன் டத்தோ அன்புமணி, வங்கி அதிகாரி.

ராமேஸ்வரி ராஜா

கோலாலம்பூர்:
ந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு கடனுதவித் திட்டத்திற்காக (BRIEF- i) பேங்க் ராக்யாட் 50 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள் ளது. இந்திய சமூகத்தின் தொழில் முனைவோருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய மற்றொரு முயற்சி இது.

‘இது நமக்குக் கிடைக்காது’ என்று யோசித்துக்கொண்டு இருந்துவிடாமல் இந்திய தொழில் முனைவோர் அவசியம் இந்த வாய்ப்பைப் பயன்படுத் திக்கொள்ள வேண்டும் என தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தெக்குனில் “SPUMI Goes Big’ திட்டத்திற்கு 30 மில்லியன் ரிங்கிட்டும் அமானா இக்தியாரில் ‘பெண்’ திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டது.

தற்போது பேங்க் ராக்யாட்டின் வாயிலாக BRIEF- i திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது இந்திய வர்த்தகர்களுக்கு நற்பயனை அளித்துள்ளது.

இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோரின் வர்த்தக விரிவாக்கம், மூலதன செலவுகளுக்கு உதவும் நோக்கில் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் தொழில் முனைவோர், மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் மற்றொரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

துணை அமைச்சர் டத்தோ ரமணனுடன் மக்கள் ஓசை இயக்குனர்.

இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த முழு ஆதரவு வழங்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என இங்குள்ள பேங்க் ராக்யாட் இரட்டை கோபுரத்தில் நடைபெற்ற BRIEF–i அறிமுக விழாவில் உரையாற்றிய சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

உண்மையில், வணிகத்தை மேம்படுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் தொழில் முனைவோரின் அர்ப்பணிப்பு எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கிறது. அதனால்தான் இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறேன். பொருளாதார பலம் மட்டுமே இந்த நாட்டில் இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். இதுவே எனது நம்பிக்கையும் கொள்கையும் என்றும் கூறினார்.

70 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பேங்க் ரக்யாட் இன்று அறிமுகப்படுத்தி யிருக்கும் இந்த BRIEF–i திட்டம், மலேசிய சமூகம் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதற்கான ஓர் அர்பணிப்பை வெளிப்படுத்துகிறது. அதே வேளையில் தீவிர வறுமையை ஒழிப்பதிலும் மலேசியாவின் பொருளாதாரத்தில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கும் இது வழிவகுக்கிறது.

இந்திய சமூக தொழில் முனைவோரை ஆதரிப்பதன் மூலம், அனைவருக்கும் வளமான பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன். சந்தையில் உள்ள மற்ற நிதித் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஆகீஐஉஊடி பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. குறு வணிகர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரையிலான கடனுதவியை ஆண்டுக்கு 6.50% வட்டி விகிதத்தில் வழங்குகிறது. சிறு, நடுத்தர வணிகர்களுக்கு 50,001 ரிங்கிட் முதல் 1 மில்லியன் ரிங்கிட் வரையிலான கடனுதவிக்கு ஆண்டுக்கு அடிப்படை வட்டி விகிதம் 0.67% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேறு சில நிதியுதவித் திட்டங்களைப் போலன்றி, BRIEF-i க்கு தொழில்முனை வோர் கட்டாய சேமிப்பு அல்லது சுய உதவிக் குழுவில் சேர வேண்டிய அவசியமில்லை.

இது தொழில்முனைவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் இல்லாமல் தங்கள் வணிகத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தும் சுதந்திரத்தை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

மற்ற நிதி திட்டங்களுடன் ஒப்பிடுகையில், BRIEF-i கடனுதவிக்கு விண்ணப்பிக்க எளிய ஆவண செயல்முறை வழங்கப்படுகிறது. இது தொழில்முனைவோர் எளிதாகவும் விரைவாகவும் விண்ணப்பிக்க உதவுகிறது. மேலும் வணிகர்களுக்கு வணிக நிதி உத்தரவாத நிறுவனத்தின் உத்தரவாதங்கள், இலவச தக்காஃபுல் காப்புறுதி வழங்கப்படுகின்றன.

விண்ணப்பங்களுக்கு அடுத்த 14 வேலை நாட்களுக்குள் ஒப்புதல் அல்லது பதில் வழங்கப்படும். BRIEF-i நிதியுதவித் திட்டம் இலக்குக் குழுவை அடைவதை உறுதி செய்வதற்கான இலக்கைக் கொண்டுள்ளது.

மைக்ரோ நிறுவனங்கள் குறைந்தது ஓராண்டும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஈராண்டும் செயல்பட்டிருக்க வேண்டும். இந்நிறுவனங்கள் சித்தோஸ், சிக்கிரிஸில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்று டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனின் சிந்தனை முயற்சியில் BRIEF-i திட்டம் உருவானது. நாடு முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தர இந்திய சமூக தொழில் முனைவோருக்கு விரிவான நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் பொருளாதாரத்தில் உயர்வு காண்பார்கள். இதுதான் பேங்க் ராக்யாட்டின் இலக்கு என்று அதன் தலைவர் டத்தோ முகமட் இர்வான் முகமட் முபாரக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன், மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ ச. கோபாலகிருஷ்ணன், இந்திய தொழில் முனைவோர் பலரும் கலந்துகொண்டனர்.
இத்திட்டம் குறித்த மேல்விவரங்களுக்கு பேங்க் ராக்யாட்டின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது QR2E (Quick Response to Entrepreneurs) ஆகியவற்றை வலம் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here