சென்னை:
தமிழ்நாட்டில் பாசிசத்தை முழுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடித்துள்ளார் என பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரும்பான்மை கூட பெற முடியாத அளவில் பாஜகவை தோற்கடித்துக் காட்டிய மக்களுக்கு பாராட்டுகள். 40 தொகுதிகளில் பாஜக கூட்டணியை படுதோல்வியடைய செய்யும் வகையில் கூட்டணி அமைத்து பெரும் வெற்றி கண்டுள்ளார் முதல்வர் என்று பாராட்டியுள்ளார்.