சுனிதா வில்லியம்ஸின் உயிருக்கு ஆபத்தா?- விண்வெளி மையத்தில் ஆபத்தான பாக்டீரியா கண்டுபிடிப்பு

போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி ஜூன் 5 அன்று புறப்பட்டுச் சென்றது. 25 மணி நேர பயணத்திற்குப் பிறகு ஜூன் 6 அன்று அவர்கள் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.

இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றுள்ளார். மீன் குழம்பு எடுத்து சென்றது தனது வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார். மீன் குழம்புடன், ஒரு விநாயகர் சிலையையும் தன்னுடன் அவர் எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்த சர்வேதேச விண்வெளி நிலையத்தில் சூப்பர்பக்’ என்று அழைக்கப்படும் ஒரு பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா விண்வெளி வீரர்களது சுவாச மண்டலத்தை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

இவை வேற்று கிரக பாக்டீரியாக்கள் அல்ல. பூமியில் உள்ள பாக்டீரியாதான். ஆனால் பூமியிலிருந்து பயணித்த இந்த பாக்டீரியாக் விண்வெளியில் மூடிய சூழலில் மிகவும் ஆபத்தானவை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here