Ferrari நிறுவனம் முதன்முறையாக அரை மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள மின்சாரக் காரை வெளியிட உள்ளது.
இந்த முதல் மின்சாரக் காரின் (EV) விலை குறைந்தது €500,000 (US$535,000) வரும் என்று நம்பத்தகுந்த ஒரு ஆதாரம் ராய்ட்டர்ஸிடம் கூறியதாக அது செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் என்ஜின்களுக்குப் புகழ் பெற்ற இத்தாலிய பிராண்ட்டான Ferrari, அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்தக் காரை அறிமுகப்படுத்தப் போவதாகவும், தற்போது சந்தையில் அதன் போட்டி நிறுவனங்கள் எலக்ட்ரிக்கல் வாகனத்தின் விலையை குறைத்தாலும், அதி-செல்வந்தர்கள் இந்த விலையில் Ferrari காரை வாங்கத் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அது தனது திட்டத்தை அமல்படுத்துவதாக அது கூறியது.
Ferrari தனது உற்பத்தி ஆலையை வடக்கு இத்தாலியில் உள்ள அதன் சொந்த ஊரான மரனெல்லோவில் இந்த வார இறுதியில் திறக்க திட்டமிட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.



















