முன்விரோதம் காரணமாக தெரிந்தவரின் குடும்பத்தை பழி வாங்க, சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து வெடிகுண்டு விரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெரும்பாக்கத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18ம் தேதி இந்த மையத்திற்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் எனவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையம், விமான நிலைய அதிகாரிகளுக்கும், சைபர் கிரைம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அப்போது மிரட்டல் விடுக்கப்பட்ட எண் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் உள்ள லேண்ட்லைன் எண்ணின் இணையதள இணைப்பு மூலம் அழைக்கப்பட்டிருனது தெரியவந்தது. இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் திருவையாறு சென்று பிரசன்னா (27) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.























