புத்ராஜெயா:
ஓட்டுநர்களின் வயதைக் கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
விபத்துகளைத் தடுக்க ஓட்டுநர்களுக்கு வயது வரம்பு விதிக்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கை விடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் கூறினார்.
“இருந்தாலும் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு நாங்கள் அவற்றை நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அதனை சரியாக பரிசீலனை செய்ய வேண்டும்,” என்றும் அவர் இன்று திங்கள்கிழமை (ஜூலை 1) நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட Universiti Putra Malaysia (UPM) சாலைப் பாதுகாப்பு ஆய்வின் அடிப்படையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களில் சுமார் 30 விழுக்காட்டினர் இன்னும் சாலையில் சுறுசுறுப்பாக இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















