நியூயார்க்:
அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்தார் ஒரு பெண்மணி.
வேற்று கிரகவாசிகளின் வாகனம் என்று அழைக்கப்படும் ‘யுஎஃப்ஓ’ வானத்தைபோல அந்தப் பெண் தமது காரை மாற்றியமைத்துள்ளார்.
சாலைத் தடத்தின் விதிமுறைகளை மீறியதாக அவரின் வாகனம் முதலில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வாகனத்தின் பதிவு எண்ணும் காலாவதியானதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், அந்த வாகனம் பக்கத்து மாநிலமான இண்டியானாவில் பதிவு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.

இச்சம்பவம் மிசோரி மாநிலத்தின் கிராஃபர்ட் வட்டாரத்தில் நடந்தது.
இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் க்ராவ்ஃபோர்டு காவல்துறை அதிகாரிகள் ஜூன் 29ஆம் தேதி ஒரு பதிவை வெளியிட்டனர். “நல்லவேளை வேற்றுகிரக வாசிகளின் வாகனத்தில் அன்பான மனிதர்கள்,” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டனர்.
வாகனத்தில் இருந்தவர்கள் நியூ மெக்சிகோ மாநிலத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்தனர் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வாகனத்தை ஓட்டியவருக்கு எழுத்துபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சமூக ஊடகத்தில் காவல்துறையின் பதிவைக் கண்ட இணையவாசிகள் இச்சம்பவத்தை அதிகாரிகள் நகைச்சுவையாகக் கையாண்டதைப் பாராட்டினர். மேலும் இதுபோன்ற வாகனங்கள் சில சாலைகளில் அவ்வப்போது வலம்வருதாகவும் இணையவாசிகள் குறிப்பிட்டனர்.






























