புத்ராஜெயா:
ராஃபா எல்லை நுழைவாயில் மூடப்பட்டதை தொடர்ந்து, ஜோர்டான் வழியாக பாலஸ்தீனத்திற்கு மலேசியா உதவிகளை வழங்கத் தொடங்கும் என்றும், ஜோர்டானில் இருந்து கிங் ஹுசைன் பாலம் வழியாக மட்டுமே மீதமுள்ள பாதை உள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் கூறினார்.
“ஜோர்டானின் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைப் பொறுத்தவரை, இந்த வழியில் உதவி வழங்கப்படுவது மலேசியாவிற்கு சாத்தியமாகும் என்றார் அவர்.
“ஜோர்டானுக்கு தினசரி ஏறக்குறைய 500 கொள்கலன்களை விநியோகிக்க உதவுகிறார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது “ என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில் , ஐக்கிய நாட்டு நிறுவனம் அனுமதி வழங்கினால் பாலஸ்தீனத்திற்கு அமைதிப் படையை அனுப்புவது தொடர்பில் இந்தோனேசியாவுடன் ஒத்துழைக்க மலேசியா தயார் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
மேலும் பாலஸ்தீனத்தில் நிலவும் மனிதநேய நிலவரம் குறித்துப் பேசுகையில், மலேசியா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியதாக அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.




















