சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனலின் அபிடின் வெற்றி வாகை சூடினார்

நிபோங் தெபால்:

சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரிகாத்தான் நேஷனலின் தேசிய வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ​​தான் தமது கட்சியின் முன்னாள் உறுப்பினர் செய்துவந்த சேவையைவிட சிறப்பாக செயலாற்ற விரும்புவதாக அபிடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

56 வயதான அபிடின் இஸ்மாயில் 13,407 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என்று அதிகாரபூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி அரிஃபின் 9,619 வாக்குகளைப் பெற்றார்.

66 வாக்குப் பெட்டிகளில் சுமார் 50 இதுவரை எண்ணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here