தைப்பிங்:
இன்று அதிகாலை ஜாலான் டோல் கமுண்டிங் அருகே ஆம்புலன்ஸ் ஒன்று பள்ளத்தில் சறுக்கி விழுந்ததில் முதியவர் உட்பட நால்வர் காயமடைந்தனர்.
இந்த விபத்து அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்தது என்று, பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த 68 வயதுடைய முதியவர் மற்றும் 20 முதல் 57 வயதுடைய மூன்று சுகாதார அமைச்சகத்தின் (MoH) ஊழியர்கள் ஆகியோர் அடங்குவதாக அவர் சொன்னார்.
“ஆம்புலன்ஸ் பாரிட் பண்டாருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் சறுக்கி, பள்ளத்தில் கவிழ்ந்தது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அவர் சொன்னார்.




















