கண் அறுவை சிகிச்சைக்காக சிலாங்கூர் சுல்தான் மருத்துவனையில் அனுமதி

ஷா ஆலம்:

சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, தனது வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த எட்டு மாதங்களாக ஒத்திவைக்கப்பட்ட சிலாங்கூர் சுல்தானில் அறுவை சிகிச்சை, இறுதியாக முழுமையான மருத்துவப் பரிசோதனையின் பின் மேற்கொள்ளப்படும் என்று, அவரது மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது என்று, சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த அறுவைச் சிகிச்சை செயல்முறைகளுக்குப் பிறகு, அவர் 10 நாட்களுக்குள் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அந்த இடுகை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுல்தான் ஷராபுதீனுக்கு இதற்கு முன் அவரது இடது கண்ணில் இதேபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here