நவராத்திரி விழா உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்தி என்பது புரட்டாசி மாதம் தொடங்கி 9 இரவுகள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.இது அன்னை சக்தியைப் போற்றும் ஒரு சிறப்பு வாய்ந்த விழா. இந்த விழாவின் மூன்று முக்கிய நாட்கள் முறையே லட்சுமி, சரஸ்வதி, பார்வதி தேவியைப் போற்றி வணங்கி, ஆயுத பூஜையுடன் நிறைவு பெறுகிறது.
பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கலைநயத்துடன் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். மேலும், உறவுகளைப் பலப்படுத்தும் ஒரு சமூக நிகழ்வாகவும் இது அமைகிறது.
அந்த வகையில் கோலாலம்பூர் கம்போங் காசிப்பிள்ளை ருத்ராதேவி சமாஜத்தில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் புடைசூழ, பஜனையுடன் நவராத்திரி விழாவின் முதல் நாள் விழா சமாஜத்தின் தலைவரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் ஜார்ஜ், சமாஜத்தின் ஸ்தாபகர் சங்கரத்னா ப.சுப்பிரமணியம் உள்ளிட்ட சமாஜ் உறுப்பினர்களுடன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இன்று தொடங்கி 10 நாட்களுக்கு நவராத்திரி விழா ருத்ரா தேவி சமாஜத்தில் நடைபெறும் பக்தர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து அம்பாளின் அருளை பெற்றுய்யுமாறு சமாஜ் தலைவர் கேட்டுக் கொண்டார்.



























