முதலாளியுடன் ஏடாகூடமாக குடிசைக்குள் நுழைந்த மனைவி.. வானில் “பறந்த” கணவர்.. அட கடவுளே

பீஜிங்: சீனாவில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த வழக்கு விசாரணையும் மும்முரமாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வசதிகளும், விஞ்ஞான வசதிகளும் பெருகியவாறே உள்ளது. இதில், டிரோன் கேமராக்களும் முக்கியமானதாகும்.

இந்த ட்ரோன் கேமரா என்பது ட்ரோனில் பொருத்தப்பட்ட ஒரு சிறப்பு கேமரா ஆகும்.. இதற்கு ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) என்றும் சொல்வார்கள். அதாவது வானத்திலிருந்து உயர்தர போட்டோக்கள், வீடியோக்களை பிடிப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

என்ன காரணம்: இது அரசியல்வாதிகளின் பாதுகாப்பு உட்பட பலவகைகளில் காவல்துறைக்கு உதவியாக இருந்து வருகிறது. ஆனால், இந்த கேமராவை, தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவர் பயன்படுத்தியதால், தற்போது கோர்ட் வரை சென்றிருக்கிறார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ளது சியான் என்ற பகுதி.இங்கு வசித்து வருகிறார் ஜிங் என்ற 33 வயது நபர். இவருக்கு தன்னுடைய மனைவியின் நடத்தை மீது நீண்ட காலமாகவே சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால், மனைவியை பின் தொடர்ந்து கவனித்து வந்தார். ஆனாலும் சரியான ஆதாரம் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

குழம்பிய கணவன்: மனைவியின் நடத்தையால் குழப்பமடைந்த நிலையில், மனைவியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் கண்காணிக்க ஆரம்பித்தார். அப்போதுதான், தன்னுடைய மனைவிக்கும், வேறொருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே இதையும் ஆதாரத்துடன் நிரூபிக்க முயன்றார். இதற்காகவே, ட்ரோன் கேமராவை பயன்படுத்த ஆரம்பித்தார் ஜிங்.

சம்பவத்தன்று, தன்னுடைய மனைவி வீட்டிலிருந்து காரில் கிளம்பி சென்றார். அப்போது தன்னுடைய ட்ரோன் கேமராவை மேலே பறக்க விட்டார் ஜிங். சிறிது நேரத்தில், வேறொரு ஆணுடன் மலைப்பகுதிக்கு கைகளை பிடித்துக்கொண்டு, ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்தாராம் மனைவி.

ஆதாரம்: கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கழித்து, அந்த குடிசையைவிட்டு 2 பேரும் வெளியே வந்துள்ளார்கள்.. பிறகு மறுபடியும் காரில் ஏறி, தன்னுடைய ஆபீசுக்கு சென்றுவிட்டாராம் மனைவி. அப்போதுதான் தெரிந்தது, அந்த நபர், மனைவியின் ஆபீஸ் முதலாளியாம்.

ட்ரோன் கேமராவில் இந்த காட்சியை பார்த்ததுமே ஜிங் அதிர்ச்சி அடைந்தார்.முதலாளியுடன் ஒழுக்கக்கேடான உறவில் இருந்துக்கொண்டு, மனைவி தன்னை ஏமாற்றுவதை ஜீரணிக்க முடியாமல் கொந்தளித்தார் ஜிங். இப்போது இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளாராம்.

வேறொரு ஆணுடன் தகாத உறவில் இருந்த மனைவியின் செயல்பாடுகளை ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்த கணவர், இதை ஆதாரமாக தற்போது கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளாராம்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை சீனாவில் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here