கோலாலம்பூர்:
2017 மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கு இடையில் மூன்று மற்றும் நான்காவது கட்டத்தில் கண்டறியப்பட்ட புற்றுநோய் சம்பவங்கள் 64.1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தொற்றுநோய் பரவல் 2012 மற்றும் 2016 க்கு இடையில் 63.7 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிகை அதிகரித்துள்ளது.
புற்றுநோய் தாமதமாகக் கண்டறியப்பட்டால் உயிர் பிழைப்பு விகிதம் குறைவாக இருந்தபோதும், புற்றுநோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்கு கவலையளிக்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



















