குருவைப் போற்றும் குரு பூர்ணிமா

(ரெ. மாலினி)

குரு பூர்ணிமா (Guru poornima) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பெளர்ணமி திதியில் கொண்டாடப்படுகின்றது

குருவிற்கும் சிஷியனுக்கும் ஈடுயில்லா ஒரு  நன்றியை ஆத்மார்த்தமாக போற்றப்படும் புனித நாளாகும். குருவருள் இன்றி திருவருள் இல்லை என்பார். குரு பூர்ணிமா நாளில் இறை நிலையை நோக்கிப் பயணிக்க கூடிய  சிஷியர்கள்  தங்களது குருவின் பாதங்களுக்கு மரியாதை செலுத்தி தங்களது நன்றிகளை மலர் காணிக்கையாக செலுத்தும் பொன்னான நாளாகும்.

தெய்வீக அன்பையும் ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு செயல்பட கூடிய குரு-சிஷ்ய உறவு  நட்பின் வெளிப்பாடாக விளங்குவதினால் இந்த உறவு எல்லா உறவுகளை கடந்து மிக புனித உறவாக கருதப்படுகிறது.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். பிறப்பைக் கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தை பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை முன் வைக்கின்றர்.

உங்கள் வாழ்க்கைக்குள் குருவின் வருகையினால், ஆத்ம சுதந்திரத்திற்கான உங்கள் பாதை திறக்கப்படுகிறது,  ஆத்மப் பயணத்தில்  பணிக்கும் ஒருவர் தனது குருவின் திருபாதங்களை போற்றியும் குருவின் திருகரங்களையும் பற்றிக் கொண்டும் தனது கர்மங்களைக் கழித்துப் பயணிக்கும் ஒரு பயணமாகும். குருவின் போதனைகளின் வழியாக, இறைவனே சிஷியரின் கையைப் பிடித்து அந்தப் பயணத்தில் வழி நடத்துகிறார் என்பது உண்மை.

அறியாமையாகிய இருட்டை விலக்கி ஞான ஒளியினை மனதில் ஏற்படுத்துவரே குரு. உண்மையான குரு ஒரு சிஷியனை வாழ்க்கைப் பாதையை சீரமைத்து அவனுக்குள் ஞான ஒளி ஏற்படுத்தி அவனை மோட்சம் பெரும் அளவுக்குக் கொண்டுச் செல்வார்.

ஆன்மிகத்தை தேடும் நபரின் வாழ்க்கையில் குரு நுழைகையில், உயர்ந்த சுய விழிப்புணர்வு  மலர்கிறது. இறைவனின் ஆசியும் குருவின் திருவருளும் ஒருவனை பக்குவபடுத்தி  தான் யார் என்பதையும் தன்னை அறியும்   ஞானத்தையும் போதிக்கின்றது. தெய்வீகத்தன்மையை ஆழமாக உணர குரு சிஷியராக செயல்படுகிறார்.

குருவின் பரிபூரண துணையுடன் நிகழ்த்தப்படும் தியானத்தின் தன்மையும் அதன் மூலமாக சிஷியருக்கு கிடைக்கும் கடவுளின் அருளும்   ஞானப்பாதைக்கு  திறவு  கோளாக விளங்குகிறது.

ஆன்மிக குரு வெறும் தகவல்களை மட்டும் தரும்  நபராக இருப்பதில்லை. அவர் ஞானம் தேடுவோரின் உயிர் நாடியாகவும் விளங்குகிறார்.  எல்லா மந்திரங்களும் குருவின் மூலமாக வந்தால் தான்   பயனளிக்கும். அவை தியானத்தின் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டு மனம் ,புத்தி ,சித்தம் ஆகியவை  தூய்மையாக்கப்படுகிறது

ஆன்மாவின் விழிப்புணர்வுக்காக தனது அன்பும் ஞானமும் பாய்ந்தோடும் தூய்மையான  சமுத்திரமாக இருந்து சேவை செய்ய இறைவன் அனுப்பும் அந்த தெய்வீக நண்பர் நமக்கான குருவாக விளங்குகிறார்

ஒரு குருவின் வழிகாட்டுதலைப் பயபக்தியுடன் கடைப்பிடிப்பதன் வாயிலாக, கடந்த காலக் கர்மவினையின் அனைத்து உட்பொதிக்கப்பட்ட நிர்பந்தங்களிலிருந்தும் ஒருவரால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். குரு உண்மையிலேயே கொடுப்பவர்களில் தலைசிறந்தவர்,ஏனென்றால் அவருடைய ஆசீர்வாதங்கள் எப்போதும் நம்முடன் இருக்கிறது,

குருவுடனான மிகவும் வலிமையான தொடர்பு நாம் செய்யும் ஆளாமான  தியானங்களின் வாயிலாக மிக  தெளிவாக உணரப்படுகிறது.

சூரியனின் ஒளிக்கதிரை எப்படி சந்திரன் பிரதிபலித்து நமக்கு ஒளி தருகிறதோ அதே போல் குருவானவர் இறைவனின் அருள் ஒளியைப் பிரதிபலித்து நமக்கு  தருபவர். குரு ஒரு பக்தனிற்கும் இறைவனிற்கும் இடையே தொடர்பை  ஏற்படுத்தும் ஒரு கருவியாக ஒரு பாலமாக செயல்படுபவர்.

நமது அன்புக்குரிய குருதேவருக்கு நீங்கள் அனைவரும் உங்களது நன்றி என்ற பரிசை அவர் அளித்த ஆன்மீகப் பொக்கிஷங்களை, குறிப்பாக இறைவனுடன் ஒன்றுபடுவதற்கான அவரது வழிமுறைகளை, பயன்படுத்துவதன் மூலம் தர வேண்டும் 

இந்த குருப் பூர்ணிமா தினத்தன்று அன்பின் உச்சபட்ச வடிவமாக  மனதளவில்  திகழும் குரு நாதருக்கு பூஜைகள் செய்து போற்றி புகழ் மாலையை அர்ப்பணிப்போமாக.

குருவே சரணம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here