கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி; அனைத்துலக பள்ளி ஊழியர் RM190,000 இழந்தார்

கோலாலம்பூர்:

இலக்கவியல் (cryptocurrency investment) முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பிய இங்குள்ள அனைத்துலக பள்ளியின் ஊழியர் ஒருவர் பண மோசடியில் சிக்கி 190,000 ரிங்கிட்டை இழந்தார்.

பாதிக்கப்பட்ட 50 வயது பெண், இந்த விஷயம் குறித்து நேற்று போலிசில் புகார் அளித்தார் என்று ஶ்ரீ ஆலாம் காவல் துறை தலைவர் சூப்ரிடெண்டன் சுஹாய்மி இஷாக் தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராம் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போல் தோற்றத்தைக் காட்டி, அறிமுகமான ஒருவரால் குறித்த முதலீட்டு திட்டம் பாதிக்கப்பட்டவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சலுகையால் ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் முதலீட்டு விண்ணப்பத்தைப் பதிவேற்றி, ஜூன் 10 முதல் ஜூலை 16 வரை மொத்தம் 190,000 ரிங்கிட் தொகையில் ஆறு முறை பண பரிவர்த்தனைகளைச் செய்தார் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த முதலீட்டில் கிடைத்த லாபம் எனக் கூறப்பட்ட ஒரு தொகையை பாதிக்கப்பட்டவர் திரும்பப் பெற கூடுதல் கட்டணம் செலுத்துமாறு கேட்டபோது தான், அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக அவர் சொன்னார்.

மேலும், இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின்படி விசாரிக்கப்படுவதாக முகமட் சுஹைமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here