குவந்தானில் காணாமல்போனதாக தேடப்பட்ட 17 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்பு

குவாந்தான்:

கடந்த ஜூலை 15 முதல் காணாமல்போனதாக புகாரளிக்கப்பட்ட சிறுமி நூர் ஐனா ஃபகிஹா ஷரிசான், 17, பெரா மாவட்டத்தின் ட்ரியாங்கில் உள்ள பேருந்து நிலையத்தில் பாதுகாப்பாக நேற்று கண்டுபிடிக்கப்பட்டார்.

பிற்பகல் 2.30 மணியளவில் பொதுமக்களால் குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பெந்தோங் காவல்துறைத் தலைவர் சைஹாம் முகமட் கஹர் தெரிவித்தார்.

குறித்த சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது, இருப்பினும் விசாரணை நோக்கங்களுக்காக மருத்துவ பரிசோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம் என்றும், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு முன்பு அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்வோம்” என்றும் அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பெந்தோங்கில் உள்ள லூரா பிலூட்டில் கூறித் இளம்பெண் காணாமல் போனதாகக் கூறப்பட்டதையடுத்து, அந்த இளம்பெண்ணைக் கண்டறிவதற்கான உதவி கேட்டு போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here