கென்யாவில் கலவரம்; அங்குள்ள மலேசியர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் -விஸ்மா புத்ரா

கோலாலம்பூர்:

கென்யாவில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களால் அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் சமீபத்திய கட்டளைகளை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நைரோபியில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், கென்யாவில் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட மலேசியர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பதட்டமான நிலைமை உருவாகும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவி வழங்குவதற்கும் அங்குள்ள மலேசிய தூதரகம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

தூதரக உதவியை நாடும் மலேசியர்கள் 611, ருண்டா க்ரோவ், ருண்டா, அஞ்சல் பெட்டி 42286, நைரோபி அல்லது தொலைபேசி +254 (01) 11052710 அல்லது +254 741 603952 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

ஜூன் 18 அன்று தொடங்கிய இந்தப் போராட்டங்களில் குறைந்தபட்சம் 50 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 413 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரச நிதியுதவியுடன் கென்யா தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here