ரூ.17.5 கோடிக்கு மும்பையில் ஆடம்பரக் குடியிருப்பை வாங்கினார் ஆர்.மாதவன்

புதுடெல்லி: இந்திய நடிகர் ஆர்.மாதவன், மும்பையின் பந்த்ரா குர்லா காம்பிளக்சில் (பிகேசி) ஆடம்பரக் குயிருப்பு ஒன்றை வாங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பதிவு ஆவணங்களின்படி, மாதவன் வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு ரூ.17.5 கோடி. அதன் பரப்பளவு 389 சதுர மீட்டர் (4,182 சதுர அடி). அந்தக் குடியிருப்பு வளாகத்தில் இரண்டு வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதி உள்ளது.

மாதவன் அக்குடியிருப்பை வாங்குவதற்கான பரிவர்த்தனை ஜூலை 22ஆம் தேதி இடம்பெற்றது. பதிவுக் கட்டணமாக ரூ.30,000மும் முத்திரைக் கட்டணமாக ரூ.1.05 கோடியும் விதிக்கப்பட்டது. மும்பையின் ஆகத் துடிப்புமிக்க, மதிப்புமிக்க இடங்களின் ஒன்றாக பந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் விளங்குகிறது.

பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பாட், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்டோரும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் அவ்வட்டாரத்தில் வசிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here