நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது: விஷால்

தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்டேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என நடிகர் விஷால் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார். இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டியவை என விஷாயல் தெரிவித்துள்ளார். உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள், தொழிலுக்கு உழைக்கு நிறைய இருக்கிறது என நடிகர் விஷால் காட்டமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here