கர்நாடகாவில் பெங்களூரு – மங்களூரு நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

பெங்களூரு:

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. வாகனங்கள் மண்ணில் புதைந்தன.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பெங்களூரு – மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 30) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணில் புதைந்தன.

வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் பெங்களூரு – மஞ்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அனைத்து போக்குவரத்துக்கும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here