தேசிய வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்த மாமன்னர் தம்பதியர்

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் தேசிய பாதுகாப்புப் படைகளின் சேவை, அர்ப்பணிப்புக்காக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று தனது பாராட்டையையும் நன்றியையும் தெரிவித்தார். அவரது துணைவியார்  ராஜா சாரித் சோபியா, மலேசிய ஆயுதப்படை (ATM) மற்றும் ராயல் மலேசியா காவல்துறை (PDRM) உறுப்பினர்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மாநிலத் தலைவர் மற்றும் ATM இன் உச்ச தளபதி என்ற முறையில், எப்பொழுதும் அமைதி மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கான அவர்களின் தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக மாமன்னர் அவர்களை மிகவும் பாராட்டினார்.

எங்கள் அனைத்து தேசிய வீரர்களுக்கும் நன்றி. உங்களின் சேவையும் தியாகமும் என்றும் நினைவுகூரப்படும் என்று மாவீரர் தினத்தை முன்னிட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், பணியில் இருந்தபோது உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மாமன்னர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here