பாதரசத்தின் துணையுடன் எதிரியை சதியால் வீழ்த்த முயன்ற செஸ் வீராங்கனை

ரஷியாவின் தாகெஸ்தானில் நடந்த செஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது வீராங்கனையான ஒஸ்மானோவா திடீரென நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போட்டியில் ரஷிய வீராங்கனை அமினா அபகராவோ தனது எதிரிக்கு விஷம் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்தனர்.

அதில், செஸ் வீராங்கனை அமினா போட்டி நடைபெறும் இடத்திற்குள் நுழைகிறார். போட்டி தொடங்கும் முன் அமினா அபகரோவா தனது எதிராளியின் மேசையை அணுகி செஸ் போர்டில் பாதரசத்தை தெளிப்பது பதிவாகியுள்ளது. இதையடுத்து, அமினா அபகராவோவுக்கு விளையாட தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக அந்நாட்டு விளையாட்டு மந்திரி கூறுகையில், பலரைப் போலவே நானும் என்ன நடந்தது என்பதில் குழப்பம் அடைந்துள்ளேன். அமினா அபகரோவா போன்ற அனுபவம் வாய்ந்த போட்டியாளரின் நோக்கங்கள் புரிந்துகொள்ள முடியாதவை. அவர் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here