நெங்கிரி இடைத்தேர்தல்; தேசிய முன்னணி பரபரப்பு பிரச்சாரம்

குவா மூசாங்:

வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறும் இலட்சியத்துடன் தேசிய முன்னணி தனது பரப்புரையை ஆரம்பித்துள்ளது.

அவ்வகையில் தேர்தல் கேந்திர இயக்குநர் தெங்கு ரசாலி ஹம்சா ஆகஸ்ட் 13 முதல் பரப்புரையை மேற்கொள்ள உள்ளதாக, காலாஸ் சட்டமன்ற உறுப்பினரும் தேர்தல் கேந்திர துணை இயக்குநருமான முஹமட் ஷாபுடின் ஹசிம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைத்து ஒராங் அஸ்லி வாக்காளர்களும் ஆகஸ்ட் 17 அன்று அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் (PDM) வாக்களிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, Orang Asli மேம்பாட்டுத் துறை (JAKOA) போக்குவரத்து சேவைகளை வழங்கும் என்று, JAKOA திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் சைஃபுல் ஜஹ்லான் முஹமட் ஆஸ்மி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here