வேதாரண்யம் அருகே மின்கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை?

வேதாரண்யம் அருகே  வீட்டின் மொட்டை மாடியில்  மின்சாரக் கம்பியை பிடித்து  தம்பதியினர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் அருகே  வீட்டின் மொட்டை மாடியில்  மின்சாரக்  கம்பியை பிடித்து  தம்பதியினர்  தற்கொலை செய்து கொண்டது  திங்கள்கிழமை காலையில் தெரிய வந்தது.

நாகை மாவட்டம், செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மு. குமரேசன் (35), புவனேஸ்வரி(28). திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தைகள் இல்லை. இத்தம்பதி வீட்டின் மொட்டை மாடியில்  அருகே செல்லும் உயர் சக்தி மின்கம்பியை பிடித்த நிலையில், மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே சடலமாகக் கிடந்தது திங்கள்கிழமை காலையில் தெரிய வந்தது. கடன் தொல்லையால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து  கரியாப்பட்டினம்  காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here