‘ஆடிப்பட்டம் தேடி விதை’ எனும் பழமொழிக்கு முத்தாய்ப்பாய் விளங்குவது ஆடி மாத காலமாகும்.
அவ்வகையில், அம்பிகையின் அருள் பெருக்கும் ஆடி மாதத்தில், அவள் அருள் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனும் உண்ணத நோக்கத்தில், நேற்று சிகாமாட், சுங்காய் செனாரூட் தோட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் கோவிலுக்கு தனது செயலவை உறுப்பினர்களுடன் சென்றதில் பெருமிதம் கொள்வதாக சிகாமாட் நாடாமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் கூறினார்.
ஆலய நிர்வாகத்தினர் அகமும் முகமும் மலர என்னை, அன்புடன் வரவேற்றனர்; மேலும், சிறப்பு செய்து கௌரவித்தனர்.

தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர், வருகை புரிந்த மக்களிடம் நலம் விசாரித்தேன்; மக்கள் கோரிக்கை குறித்து சிறு கலந்துரையாடல் நடத்தினேன்.
அவ்வகையில், இக்கோவிலின் கட்டுமான பணி, சமூக வளர்ச்சிக்கான நிதி குறித்து ஆலய நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்தப் பிறகு, சிகாமாட், சுங்காய் செனாரூட் தோட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் கோயிலுக்கு 10,000 ரிங்கிட் மானியம் வழங்கினேன்.
இம்மானியம், இக்கோவிலின் நற்பணிக்கு பேருதவியாக இருக்கும் என பெரிதும் நம்புகிறேன்.

இனி வரும் காலங்களிலும், தொன்று தொட்டு கடைப்பிடிக்கும் ஆடி மாத சிறப்பு வழிபாடுகள் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப செம்மையாக நடைபெற வாழ்த்துகிறேன். ‘கோயில் இல்லாத ஊரில் குடி இருக்காதே’ எனும் முன்னோரின் சொல்லுக்கு இணங்க முறையாக வழிபாடு செய்வோம்.
வளர்ந்து வரும் நம் சந்ததியினருக்கு சமய நெறியோடு வழிபாடுகளைக் கற்றுக் கொடுப்போம். அம்மன் அருள் அனைவருக்கும் உண்டாகட்டும் என்று யுனேஸ்வரன் வாழ்த்தினார்.
























