மெந்தகாப், ஆக. 14-
ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பகாங் மாநிலத் தமிழ்ப்பள்ளிக்களுக்கான கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்றனர்.
குழு நிலையிலான ஆட்டங்களில் 4 வெற்றிகளையும் 1 சமநிலையையும் கண்டு 13 புள்ளிகளைப் பெற்றுக் குழுவில் முதல் இடத்தை வென்றனர்.
அரையிறுதி ஆட்டத்தில் ரவூப் தமிழ்ப்பள்ளியை வென்று, இறுதியாட்டத்தில் குவாந்தான் பாண்டார் இந்திரா மாக்கோத்தா தமிழ்ப்பள்ளியை வீழ்த்தி வரலாற்றில் முதன் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றினர். இராண்டுகளுக்கு முன் மறைந்த ஆசிரியர் கணேசன் தலைமையில் பள்ளியில் கால்பந்து பயிற்சி தொடங்கியது.
விதை விதைத்தவரின் கனவு இன்று நனவாகியது என்று ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் சரவணன் சடையர் தெரிவித்தார். மாணவர்களுக்குச் சிரமம் பாராமல் பயிற்சியளித்த மோகன், மணிமாறன், குணாளன், சிவஜோதியன், ஆறுமுகம், பார்த்திபன் ஆகியோர் ஒத்துழைப்புக்கும் ஆதரவும் வழங்கிய பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு கால்பந்துப் போட்டியில் அபார ஆட்டத் திறனை வெளிப்படுத்திய ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு என்றார் அவர்.