செவ்வாய்கிழமை வழிபாடு

செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் ‘செவ்வாய்’ பகவானுக்குரியதாகும். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான முருகப் பெருமானையும் விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற கிழமை செவ்வாய் கிழமையாகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். திருமணத்தடையை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம் நீங்க, ஆடி மாத கடைசி செவ்வாயில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது சிறப்பு. பெண்கள் மங்கள கௌரி விரதம் இருந்தால் விஷேச பலன்கள் கைகூடும்.

ஆடி கடைசி செவ்வாயில் செய்ய வேண்டியவை

* ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில், ராகு கால வேளையில், அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாற்றுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.

* பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்பது நம்பிக்கை.

* செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

* ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன்கள் கிடைக்கும்.

* ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் விரதம் இருக்க வேண்டும்.

* செவ்வாய் தோஷத்தாலும், நாக தோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகால பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.

* ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பதும் நல்லது.

பொதுவாக செவ்வாய் கிழமை என்பது வழிபாட்டிற்கு மட்டுமின்றி, கடன்களை அடைப்பதற்கும் ஏற்ற நாளாகும். செவ்வாய் கிழமையில் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதால் கடன் விரைவில் அடைபடுவதுடன், மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படாது. அதிக கடனால் கஷ்டப்படுபவர்கள், வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்பவர்கள் செவ்வாய்கிழமையில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து சிறிய வழிபாட்டை செய்தாலே பெரிய மாற்றத்தை காண முடியும். இதை ஆடி செவ்வாய் மட்டுமின்றி அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் செய்யலாம்.

ஒரு கை பிடி அளவிற்கு துவரம் பருப்பை பித்தளை கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது ஒரு அகலில் நெய் விட்டு தீபம் ஏற்றுங்கள். இதை செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். சிறிது நேரம் விளக்கு எரிந்த பிறகு அதை குளிர வைத்து விட்டு, ஒரு சிவப்பு துணியில் அந்த துவரம் பருப்பை வைத்து ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும். அன்று இரவு அந்த முடிச்சை, தலையணைக்கு அடியில் வைத்து படுத்துக் கொள்ளுங்கள். இதை செய்யும் போது தரையில் தான் படுக்க வேண்டும். மெத்தையில் படுக்கக் கூடாது. மறுநாள் காலை எழுந்து, சுத்தமாக குளித்து விட்டு, அந்த பருப்பு முடிச்சை எடுத்து உங்கள் வீட்டின் தலைவாசலில் கட்டி விடுங்கள். ஒரு நாள் முழுவதும் அது அப்படியே இருக்க வேண்டும்.துவரம் பருப்பு முடிச்சை வாசலில் கட்டிய பிறகு யாருக்காவது அல்லது கோவிலுக்கோ துவரம் பருப்பு வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். மூன்றாவது நாள் வீட்டு வாசலில் கட்டப்பட்டுள்ள பருப்பு முடிச்சை எடுத்து, அதிலுள்ள பருப்பை காக்கை, புறா ஆகியவற்றிற்கு உணவாகவோ அல்லது பசுவிற்கு உணவாகவோ கொடுத்து விடலாம்.

தானமாக கொடுக்க வேண்டியவை

இந்த வழிபாட்டினை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, நன்மைகள் நடப்பதை காண முடியும். விரைவில் கடன்கள் அடையும். கஷ்டங்கள் தீர்ந்து, வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.துவரம் பருப்பு முடிச்சை வாசலில் கட்டிய பிறகு யாருக்காவது அல்லது கோவிலுக்கோ துவரம் பருப்பு வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். மூன்றாவது நாள் வீட்டு வாசலில் கட்டப்பட்டுள்ள பருப்பு முடிச்சை எடுத்து, அதிலுள்ள பருப்பை காக்கை, புறா ஆகியவற்றிற்கு உணவாகவோ அல்லது பசுவிற்கு உணவாகவோ கொடுத்து விடலாம். இந்த வழிபாட்டினை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, நன்மைகள் நடப்பதை காண முடியும். விரைவில் கடன்கள் அடையும். கஷ்டங்கள் தீர்ந்து, வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here