டிராகன் பச்சை குத்திய ஆடவர் ரயிலில் அடிபட்டு மரணம்- ஜோகூர் போலீஸ்

கோலாலம்பூர்:

ஜோகூர் மாநிலத் தலைநகர் கம்போங் மெலாயு மஜிடீ அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் முதுகில் டிராகன் பச்சை குத்தப்பட்ட நபர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவ இடத்தில் குற்றவியல் அல்லது தவறான செயற்பாட்டின் கூறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இல்லை என்று, தென் ஜோகூர் பாரு காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த நபரின் தலை மற்றும் உடல் சிதைந்த நிலையில் இருப்பதாகவும் , அவ்வழியாக சென்ற ரயிலில் அவர் அடிபட்டதாக நம்பப்படுபவதாகவும் கூறிய அவர், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here