39 நாய்களை சாகும்வரை பலாத்காரம்.. பிரபலத்தின் நம்ப முடியாத கொடூரம்.. முதலை நிபுணர் சிக்கியது எப்படி

கான்பெரா: 39 நாய்களிடம் உறவு கொண்டு, அந்த நாய்களை கொடூரமாக கொலையும் செய்திருக்கிறார் இந்த பிரபலம். இவருக்கு நீதிமன்றம் தற்போது உரிய தண்டனையை வழங்கியிருக்கிறது. இந்த வழக்கு விவகாரம்தான் மிகப்பெரிய அதிர்வலையை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.என்ன நடந்தது?

மனிதர்களையும்தாண்டி, சில கொடூரர்கள், மிருகங்களுடனும் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் பெருகி கொண்டே வருகின்றன. அந்தவகையில், கடந்த வருடம் அமெரிக்காவில் முதலை நபர் பரபரப்பாக பேசப்பட்டார்.

அவர் பெயர் ஆடம் பிரிட்டன். 52 வயதாகிறது.பிபிசி மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல்களின் தயாரிப்புகளில் பணியாற்றிய விலங்கியல் நிபுணர் ஆவார்.

விலங்குகள்: ஆனால், விலங்குகளை பலாத்காரம் செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. இதில் நாய்கள் என்றால் ஆடம் கூடுதலாக கவனத்தை செலுத்துவாராம். நாய்களை குறிவைத்து, பலாத்காரம் செய்துவிட்டு, அதனை வீடியோக்களாக சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துவிடுவார்.

இந்த வீடியோக்களை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, நிறைய புகார்களை கொண்டு சென்றுள்ளனர். இதுவரை மொத்தம் 56 விலங்குகளை பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார் ஆடம். அதேபோல, குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களையும் பரப்பியிருக்கிறார்.

தனி மோகம்: விலங்குகளை பலாத்காரம் செய்து துன்புறுத்தி, அதில் இன்பம் அடைவாராம். சாகும்வரை விலங்குகளை பலாத்காரம் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார். நாய்கள் மீது இவருக்கு தனி மோகம் இருந்திருக்கிறது. நாய்களை பலாத்காரம் செய்வதற்காகவே, ஸ்பெஷலாக ஒரு ரூம் டிசைன் செய்துள்ளார். இதற்கு டார்ச்சர் ரூம் என்று பெயரும் வைத்திருக்கிறார். பல நாய்களை பலாத்காரம் செய்து கொன்றது இந்த ரூமில்தான்.

ஒவ்வொரு முறை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்கும்போதும், தன்னுடைய முகத்தை மட்டும் மறைத்து கொள்வாராம். முகம் தெரியாமல், வெறும் பலாத்கார வீடியோக்களை மட்டும் போஸ்ட் செய்துவிடுவார்.

டெலிகிராம் க்ரூப்: அதுமட்டுமல்ல, இவரை போலவே நாய்கள் மீது யாருக்கெல்லாம் காமவெறி உள்ளதோ, அதுபோன்றவர்களை எல்லாம் சோஷியல் மீடியாவிலேயே தேடிப்பிடித்துள்ளார். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, டெலிகிராம் மூலம் க்ரூப் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மாட்டிக்கொள்ளாமல் இந்த தவறுகளை எப்படி செய்வது என அவர்களுக்கு கற்று தந்துள்ளார்.

ஆடமுக்கு, வீடுகளில் வளர்க்கப்படும் கொழுகொழு, செழிப்பான நாய்கள் என்றால் ரொம்ப பிரியமாம்.. இந்த நாய்கள் மீதுதான் பிரத்யேகமாக கவனம் செலுத்தி வந்திருக்கிறார். இதற்காகவே ஆன்லைனில், விளம்பரம் செய்வாராம்.

பராமரிப்பு மையம்: நீண்ட தொலைவுக்கு வீடு மாறுபவர்கள் அல்லது வேறு எங்காவது டிரான்ஸ்பர் ஆகி செல்பவர்கள் இருக்கிறீர்களா? அப்படி நீங்கள் குடியேறி சென்றால், நீங்கள் வளர்க்கும் நாய்களை அங்கு கொண்டு செல்ல முடியாது. அதனால், என்னிடம் விட்டு செல்லுங்கள், தனியாக பராமரிப்பு மையத்தை நான் செயல்படுத்துகிறேன் என்று விளம்பரப்படுத்துவாராம்.

உலகமறிந்த விலங்கு நிபுணர் என்பதால், ஆடம் பிரிட்டன் மீது யாருக்குமே சந்தேகம் வராமலேயே இருந்திருக்கிறது. அதனால் நிறைய பேர் தாங்கள் வளர்க்கும் நாய்களை ஆடமிடம் பராமரிப்பிற்கு விட்டுவிட்டு வெளியூர் செல்வார்களாம். ஆனால், ஒரே ஒரு பெண் மட்டும், ஆடம் பிரிட்டனின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வந்து, புகார் அளித்தார். அதற்குபிறகுதான், அவரது மொத்த வண்டவாளமும் கடந்த வருடம் வெளிச்சத்துக்கு வந்தது.

வாக்குமூலம்: இந்த தொடர்பான வழக்கு விசாரணையும் கடந்த செப்டம்பரில் வடக்கு ஆஸ்திரேலிய சுப்ரீம் கோர்ட்டில் நடந்துள்ளது. தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் உண்மை என்று ஒப்புக் கொண்ட ஆடம், மேற்கொண்ட தகவல்களையெல்லாம் அவராகவே கோர்ட்டில் வாக்குமூலம் தந்திருக்கிறார். ஆடமின் இந்த வாக்குமூலத்தை கேட்டு நீதிமன்றமே கதிகலங்கி போய்விட்டதாம்.

ஆனால், இது தொடர்பான வாதங்கள் கோர்ட்டில் நடந்தபோது, பாதுகாப்பு ஊழியர்களையும், பொதுமக்களையும், வழக்கு நடக்கும் இடத்தைவிட்டே வெளியேறுமாறு நீதிபதி கண்டிப்பாக சொல்லியிருந்தார்.

மீண்டும் வழக்கு: இந்நிலையில், இந்த வழக்கில் ஆடம் பிரிட்டனுக்கு நீதிபதி தண்டனை வழங்கியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு டார்வின் நீதிமன்றத்தில் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது, 39 நாய்களைச் சித்ரவதை செய்து கொன்றது, நாய்களின் சடலங்களை முதலை போன்ற விலங்குகளுக்கு உணவாக்கியது உட்பட 56 குற்றங்களை கோர்ட்டில் ஒப்புக்கொண்டிருக்கிறார் ஆடம். அத்துடன், சிறார் மீதான பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டுவிட்டார்.

தண்டனை: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஆடம் பிரிட்டனின் நடத்தை மிகவும் கோரமானது. அவருடைய குற்றங்கள் எந்த ஒரு சாதாரண மனித சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை” எனக் குறிப்பிட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறார்.

துன்புறுத்தல்கள்: ஆடம் பிரிட்டன் 42 நாய்களை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அவற்றில் 39 நாய்களை கொலை செய்திருக்கிறாராம்.. அதன்படி, விலங்குகளுடன் உடலுறவு கொள்ளுதல், மற்றும் விலங்கு வன்கொடுமை தொடர்பான 56 குற்றங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதுடன், சிறார் மீதான பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் தொடர்பான 4 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆடம் பிரிட்டனின் வீடியோவில் இருந்து துப்பு கிடைக்கும் வரை, இந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவராமலேயே இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு அவரது பண்ணை வீட்டை சோதனையிட்டபோது, அவரது லேப்டாப்பில்தான் இத்தனை குற்றங்களையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

கொடூரம்: அந்த லேப்டாப்பை ஆராய்ந்த போலீஸ், ஆடம் பிரிட்டன் செய்த குற்றங்கள் வெளியிட முடியாத அளவுக்கு கொடுமையாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்த வழக்கு விசாரணையின்போது, வாக்குமூலத்தை ஆடம் சொல்ல ஆரம்பித்ததுமே, சிலர் அதை கேட்டு தாங்க முடியாமல் வெளியே சென்றுவிட்டார்களாம். அந்த அளவுக்கு அருவருப்பான, கொடூரமான செயல்களை ஆடம் செய்திருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here