கோலாலம்பூர்:
வயது குறைந்தோரின் மோட்டார் பந்தய சாகச அட்டூழியம் மீண்டும் தலைத் தூக்கியிருக்கிறது. பெற்றோரின் அலட்சியமும் கண்காணிப்பு இன்மையும் இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
சுங்கை பூலோ எல்மினா பிஸ்னஸ் பார்க் அருகில் வியாழக்கிழமை இரவு 11.20 மணியளவில் 13 வயது நண்பர்கள் இருவர் அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தனர் என்று சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டென்டன்ட் முகமட் ஹஃபிஸ் முஹம்மட் நோர் கூறினார்.
அந்த இருவரும் முன் சக்கரத்தை தூக்கிய வாறு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டதில் இருவருமே உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.