எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு குறித்து விவாதிக்க பெரிக்காத்தான் நேஷனல் இந்த வாரம் கூடுகிறது. PN தலைமைக் கொறடாவாகிய தக்கியுதீன் ஹசான், இந்த வரைவு தனக்கு கிடைத்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முடிவை இறுதி செய்ய கூட்டம் நடைபெறும் என்றும் உறுதிபடுத்தினார்.
ஆம், நான் அதைப் பெற்றுள்ளேன். விரைவில் அதைப் பற்றி விவாதிப்பேன். கடவுள் விரும்பினால், (சந்திப்பு) இந்த வாரம் என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. இந்த வரைவை PN தலைவர் முஹிடின் யாசின் மற்றும் கூட்டணியின் மூத்த தலைவர்கள் தங்கள் தொகுதிகளுக்கான நிதி குறித்து என்று தக்கியுதீன் முன்பு கூறினார்.
அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்தே முடிவு அமையும். அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், பிரச்னைகள் குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார்.
இந்த மாத தொடக்கத்தில், துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, சமர்பிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பெரிக்காத்தான் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளுக்கும், அரசுக்கும் இடையே கூட்டுக் குழு கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.









