கெடா நெடுஞ்சாலையில் உள்ள வாய்க்காலில் இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுப்பு!

அலோர் ஸ்டார்:

லோர் ஸ்டாரிலுள்ள சுல்தான் அப்துல் ஹலிம் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட ஒரு கட்டடத்தின் பின்புறம் உள்ள வாய்க்காலில் நேற்று இரண்டு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாகவும், கெடா போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் பிரிவு, கே-9 எனும் மோப்ப நாய்களைக் கொண்டு தடயங்களைக் கண்டறியும் பிரிவு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கண்டெடுக்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், அப்பெண்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை கோத்தா ஸ்டார் காவல்துறைத் தலைவர் ஏசிபி சித்தி நோர் சலாவத்தி சாட் உறுதிசெய்ததுடன், சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் பின்னர் வழங்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here