சூரியின் ‘கொட்டுக்காளி’ படத்தை பாராட்டிய சீமான்

விமல் – லட்சுமி மேனனின் நடிப்பில் உருவான ‘மஞ்சப்பை’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து, பின்னர் ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ்.ஆணாதிக்கம் போன்ற சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் இந்த படம் திரையிடப்படுவதற்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது ரிலீஸுக்கு பின்னரும் லோகேஷ் கனகராஜ், சுதா கொங்கரா போன்ற பல்வேறு தரப்பினர் இடையேபாராட்டுகளைப் பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கொட்டுக்காளி திரைப்படத்தை பாராட்டி இருக்கிறார். “உலக தரமான படைப்பாக கொட்டுக்காளி திரைப்படம் வெளியாகி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ் திரைத்துறையில் நல்ல கதை களத்திற்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதாக சொல்லப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக மகாராஜா, கருடன், தங்கலான், வாழை, கொட்டுக்காளி போன்ற அடுத்தடுத்து வெளியாகியிருக்கும் தமிழ் திரைப்படங்கள் அழுத்தமான கருப்பொருளோடுவெளியாகி இருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது.

குறைந்த பட்ஜெட்டில் மிக சிறிய கதை களத்தில் திரைக்கதைக்கு உயிரோட்ட மொழிக்கும் இசை என்று ஏதுமில்லாமல்சிறிதும் சோர்வோ சலிப்போ உண்டாகாமல் ஒரு திரைப்படத்தை சுவைபட படைத்தளிக்க முடியும் என்பதை மிகப் பெரிய சாதனை. பன்னாட்டு திரைப்படங்களுக்கு இணையான உயரத்தில் தமிழ் திரைக்கடையை சிறகடிக்க செய்த அன்புத்தம்பி வினோத் ராஜா அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here