Ihasan Madani திட்டத்தின் கீழ் 70 கைதிகளுக்கு இன்று முன்கூட்டியே விடுதலை

கோலாலம்பூர்:

நாட்டின் 67வது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து, இஹ்சான் மடானி திட்டத்தின் கீழ் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 70 கைதிகள் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) விடுவிக்கப்பட்டனர்.

பேராக்கில், மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்த 34 நபர்கள் இந்த திட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டனர் என்று, பேராக் மாநில சிறைச்சாலைகளின் துணை ஆணையர் சி.சரின் ப்ரோம்விச்சிட் கூறினார்.

அதில் மொத்தம் 14 பேர் தாப்பா சிறையிலிருந்தும், 13 பேர் தைப்பிங் சிறையிலிருந்தும், 7 பேர் கமுண்டிங் சீர்திருத்த மையத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here