கோலாலம்பூர்:
KLCC க்கு அருகில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் ஏறக்குறைய 20 மீட்டர் உயரமான கோபுரத்தில், கிரேன் ஆபரேட்டர் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
27 வயதான நபர் மயக்கமடைந்ததாகக் கூறி, கோலாலம்பூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு முதலில் ஒரு அழைப்பு வந்தது என்றும், அதனைத் தொடர்ந்து ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து 10 பேர் கொண்ட இயந்திரங்கள் இடத்திற்கு விரைந்தனர் என்று, JBPM மூத்த செயல்பாட்டுத் தளபதி மியோர் முஹமட் ஃபிக்ரி முகமட் ஜைனி தெரிவித்தார்.

“மாலை 5.50 மணிக்கு அந்த இடத்திற்கு வந்தபோது, கட்டுமான பணியாளர்களில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்த பாதிக்கப்பட்டவர் 20 மீட்டர் உயரமான கோபுரத்தில் மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டதாகவும், பின்னர் மலேசிய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ அதிகாரி பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரவு 7.46 மணியளவில் அருகிலுள்ள டவர் கிரேன் உதவியுடன் பாதிக்கப்பட்டவரின் சடலம் கீழே இறக்கப்பட்டு, அவரது உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.





















