கோலாலம்பூர்:
மியான்மாரில் செயல்படும் ஒரு மனித கடத்தல் கும்பலில் ஒரு முன்னாள் துணை அமைச்சர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்டிருப்பதைத் தொடர்ந்து போலீஸ் புலன் விசாரணையை தொடங்கி இருக்கிறது.
இதனை உறுதிப்படுத்திய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், மேலதிக கருத்துக்கள் தெரிவிப்பதற்கு மறுத்துவிட்டார். தேவைற்ற ஆருடங்களுக்கு தீனி போட தாம் விரும்பவில்லை என்றார் அவர்.
போலீஸ் புலன்விசாரணையை தொடங்கிவிட்டது. இந்த விவகாரத்தை நிபுணத்துவத்துடன் அவர்கள் கையாள்வர் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.