இந்திய இளைஞர்களை  புதியப் பரிணாம வளர்ச்சிக்கு  அழைத்தும் செல்லும் Blitz  Motorsports Malaysia .

(ரெ. மாலினி )

இந்திய இளைஞர்களை  புதியப் பரிணாம வளர்ச்சியின் வாயிலாக நல்வழிக்கு இட்டுச் செல்லும் வகையில் நாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பீடு நடை போடுகிறது  “ Blitz  Motorsports Malaysia .

நாட்டின் 67ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை  முன்னிட்டு டத்தாரான் செஜாரா ஆயேர்குரோ மலாக்காவில்  நாடு தழுவிய நிலையிலிருந்து 50க்கும் மேற்பட்ட பிலிஸ் மோட்டார் உறுப்பினர்கள்  ஒன்று கூடினர்.

சுதந்திர தின நாளில் சகோதரத்தன்மையும் ஒருமைப்பாட்டையும் மேலோங்கச் செய்யும் வகையில் இந்த மெர்டேக்கா கார்  பேரணி திகழ்கிறது.

வன்முறை, தீயப் பழக்க வழக்கங்களுக்கு இலக்காகி வரும் இளைஞர்கள் மத்தியில்  கார் ஸ்போர்டஸ்  நடவடிக்கைகளில் ஆர்வத்தை மேலோங்க செய்து அவர்களின் சிந்தனையை பயனுள்ள வகையில் கொண்டுச் செல்ல எங்களது அமைப்பு செயல்படுகிறது .

மோட்டார் வண்டிகளை அழகுப்படுத்துதல், அதனை உபரிப்பாகங்களை அதி நவீனமாக மாற்றி அமைத்து மெருகூட்டுவது. கார் சாகசம் போன்ற பல நடவடிக்கைகளில்  அவர்கள் தங்கள் தனி திறமைகளைக் கொண்டுச் செய்கின்றனர்.  இது ஒரு ஆரோக்கியமான பொழுது போக்காக அமைந்துள்ளது, இதனை தவிர பல்வேறு சமுதாயத்  தேவைகளுக்கும் உதவிக்கரம் வழங்குவதில்  எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது என  அதன் தேசியத்  தலைவர் ரஷீட் @ரெஸ் கூறினார்.

தற்பொழுது பெண்களும் எங்களுடன் இணைந்துக் கொள்ள அழைக்கின்றோம்  இதில் ஆர்வமுள்ளவர்கள்  எங்களை அணுகலாம். விரைவில் பிரமாண்டமான முறையில் மிக பெரிய அணியுடன் தூர தேசத்தை  நோக்கிய  கார் பயணத்தையும் மேற்கொள்ள  எண்ணம் கொண்டு உள்ளோம் என மக்கள் ஓசைக்கு அழித்த நேர்காணலில அவர் கூறினார், வரிசைப்படுத்தி நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பல ரக கார்களின் உரிமையாளர்கள் தங்களுகே உரியப் பாணியில் கார் சாகசத்தை காட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here