4.8 கிலோ எடையில் பிறந்த பிரம்மாண்ட குழந்தை

புதிதாய் பிறந்த தனது குழந்தையின் படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துக் கொண்ட இளம் தாய் ஒருவர், அந்தப் படத்திற்கு கிடைத்த லைக்குகளையும் கருத்துப் பதிவுகளையும் கண்டு அசந்துப் போயிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக் குழந்தை காண்போரை வாய் பிளக்க வைக்கும் எடையில் பிறந்திருக்கிறது என்பதுதான் இங்கு ஆச்சரியத்தின் எல்லைக்கு நம்மைக் கொண்டு செல்கிறது.

அன்மையில் ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையில் பிறந்த அந்தப் பெண் குழந்தை பிறக்கையில் 4.8 கிலோ கிராம் எடையைக் கொண்டிருந்தது.

அளவுக்கதிகமான கணப்பரிமாணத்தைக் கொண்டிருந்ததால் அறுவை சிகிச்சையின் மூலம் அந்தக் குழந்தை பிரசவிக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளிலேயே அதிக எடைக் கொண்ட குழந்தை இதுதான் என்ற சாதனையையும் தன் குழந்தை படைத்திருப்பதாக அதன் நான்கு பிள்ளைகளுக்கு தாயான 26 வயது வான் நூர் ஜஹிடா வான் முயிம் தெரிவித்தார்

கொழுகொழு குழந்தையும் தாயும் இருக்கும் படப்பதிவு டிக்டோக் வலைத்தளத்தில் வலம் வந்த 24 மணி நேரத்தில் 2.5 மில்லியன் லைக்குகளை அள்ளி இருக்கிறது . பராமரிப்பகத்தில் விடப்படும் சிறார் உடல்வாகோடு அந்தக் குழந்தைக் காணப்படுவது உள்ளிட்ட பலவாறான கருத்துக்களையும் வாழ்த்துகளையும் டிக்டோக் ரசிகர்கள் வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here