பினாங்கு:
குறை சொல்பவர்கள், விமர்சனங்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை…கவலைப்படவும் இல்லை என்று பினாங்கு மாநில முதலமைச்சர் செள கொன் இயோ திட்டவட்டமாக கூறினார்.
ஒரு முதலமைச்சராக எனக்கு முன் நிறைய கடமைகள் உள்ளன. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட திட்டங்களை, நிகழ்ச்சிகளை நிறைவேற்றவேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது.
பல திட்டங்கள் தொடக்க கட்டத்திலேயே உள்ளன. 2023 மாநில தேர்தல் கொள்கை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி முடிக்க வேண்டி உள்ளது. இவற்றில் முழுக் கவனத்தையும் செலுத்தப் போகிறேன் என்று அவர் சொன்னார்.
இம்மாதம் நடைபெற உள்ள பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு போட்டியிடவில்லை என்று கொன் இயோ அண்மையில் அறிவித்தார்.
இதனால் தாம் வெறும் நொண்டி வாத்து தான் என்று விமர்சனம் செய்யப்படுவது பற்றி கவலைப்படப் போவதில்லை என்று அவர் கூறினார்.




















