கோப்பெங்:
ஓராங் அஸ்லி பூர்வீக நிலத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். அதே சமயம் கட்டுமான பணிகள் அனைத்தையும் மூட்டைக்கட்ட வேண்டும் என்று ஈப்போ உயர் நீதிமன்றம் இரண்டு நிறுவனங்களுக்கு இன்று அதிரடியாக உத்தரவிட்டது.
கோப்பெங், உலு கெருந்துமில் மினி நீர் மின்சார உற்பத்தி நீரணை கட்டுமான பணிகளை பேராக் ஹைட்ரோ ரினியுபல் எனர்ஜி கார்ப்பரேஷன் சென்டிரியான் பெர்ஹாட் மேலும் கொன்சோ ஹைட்ரோ ஆர் இ சென்டிரியான் பெர்ஹாட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் உடனடியாக கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு அங்குள்ள அனைத்து இயந்திரங்களையும் பொருட்களையும் கையோடு எடுத்துச் செல்லும்படி நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குர்ச்சரான் சிங் உத்தரவிட்டார்.
இடத்தையும் இயந்திரங்களையும் காலி செய்வதற்கு நீதிபதி 30 நாட்கள் அவகாசம் வழங்கினார்.
இடுகாட்டு நிலத்தை சேதப்படுத்தியதற்கு 10,000 ரிங்கிட்டும் மரங்களை நாசப்படுத்தியதற்கு 10,000 ரிங்கிட்டும் வழக்கு தொடுத்த உலு கெருந்தும் ஓராங் அஸ்லி மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.









