20 கள்ளக் குடியேறிகளுடன் கடலில் குதித்த படகோட்டி

கோலாலம்பூர்:

ள்ளக் குடியேறிகளை படகில் ஏற்றி வந்த ஒரு படகோட்டி அதிகரிகளிடம் இருந்து தப்பிக்க 20 கள்ளக் குடியேறிகளுடன் கடலில் குதித்தார்.

மலேசிய கடற்படை அமலாக்க பிரிவு அதிகாரிகளின் ரோந்துக் காவல் படகைக் கண்டதும் நிலைத்தடுமாறிய அந்தப் படகோட்டி, முதலில் அதிகாரிகளின் படகை மோதிச் சேதப்படுத்தினார். கோல லங்காட்,

தஞ்ஜோங் ரு கடல் பகுதிக்கு வட மேற்கே சுமார் 0.2 கடல் மைல் தூரத்திற்கு அப்பால் இன்று பின்னிரவு 1.50 மணிக்கு அந்தக் கப்பல், கடற்துறை பாதுகாவல் படகை மோதியது.

முன்னதாக அந்தத் தோணியை தூரத்தில் கண்டுவிட்ட அதிகாரிகள் சுமார் 35 நிமிடங்களுக்கு அதனைத் துரத்தினர். இறுதியில் அதிகாரிகளின் படகை மோதிவிட்டு அந்தப் படகோட்டி கடலில் குதித்தார்.

அவரைத் தொடர்ந்து இன்னும் 20 கள்ளக் குடியேறிகளும் கடலில் குதித்து கடலோரமாக, காண்டா காடுகள் நிறைந்த சதுப்பு நில பகுதிக்கு நீந்திச் சென்று விட்டனர் என்று சிலாங்கூர் மாநில கடற்பாதுகாப்பு துறை தலைவர் கேப்டன் அப்துல் முஹைமின் தெரிவித்தார்.

கடலில் கைவிடப்பட்ட படகில் மேற்கொண்ட சோதனையில், 22 மேலும் 45 வயதுடைய இரண்டு பெண்கள் மட்டுமே இருந்தது காண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் அடையாளப் பத்திரங்கள் எதுவுமில்லை.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 20க்கும் மேற்பட்டோர் அந்த படகில் இருந்ததாகவும் அண்டை நாடான அவர்களின் சொந்த நாட்டிற்குத் திரும்பும் வழியில் அவர்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here