கோலாலம்பூர்:
எதிர்காலத்தில் கல்லூரியில் ஏற்படக்கூடிய பகடிவதை உட்பட பல பிரச்சனைகலிலிருந்து தமது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பள்ளி மாணவர்கள் குண்டர் கும்பல் அல்லது ரகசிய சங்கங்களில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) சுங்கை பீசியில் உள்ள சலாக் செலாத்தானில் நடந்த கும்பல் தொடக்கம் மற்றும் பதவியேற்பு விழாவில் நடத்தப்பட்ட சோதனையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 61 நபர்களில் 14 பள்ளி மாணவர்களும் அடங்குவதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
18 வயதுடைய முன்னாள் மாணவர் ஒருவரால் குறித்த பதின்மவயதினர் பணியமர்த்தப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் இன்னும் பள்ளியில் படித்துவருவதாகவும், மீதமுள்ள ஒன்பது பேர் படிப்பை பாதியில் விட்டதாகவும் அவர் சொன்னார்.
“மேலும் இந்தக் கும்பலில் சேர்ந்தால், பள்ளியில் அவர்கள் தாக்கப்பட்டால், அதன் உறுப்பினர்களுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 61 முதல் 91 வயதுக்குட்பட்ட 10 முதியவர்கள், 18 முதல் 59 வயதுக்குட்பட்ட 37 பெரியவர்கள் மற்றும் 14 பதின்மவயதினர் ஆகியோர் அடங்குவர். அதில் உள்ள சில உறுப்பினர்களுக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.
ROS இல் பதிவு செய்யப்பட்ட சங்கம் என்ற போர்வையில் இந்தக் கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.




















